
அனுராதபுரத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகிய இருவரும் தமிழ் இந்து முறைப்படி திரும்ணம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
குறித்த தம்பதியினர் வவுனியா, குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் பிரதம குருக்கள் திவாகரக்குருக்கள் தலைமையில் மந்திரங்கள் இடம்பெற்று, இந்து முறைப்படி தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வை கேள்வியுற்ற வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் இருவர் இவ்வாறு தமிழர் கலாசாரத்தின் படி வேட்டி, சேலை அணிந்து ஆலய மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்தமை பலரதும் பாராட்ரைப் பெற்றுள்ளது