
காதல் ஜோடியை 4 5 பேர் சேர்ந்த கும்பல் தாக்கும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.
பீஹார் மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.அதாவது, அந்த பகுதியில், இளம்பெண்ணும், வாலிபரும் தனியாக இருந்ததாக தெரிகிறது.இதைக் கண்ட, 4 பேர் சேர்ந்த கும்பல் வாலிபரை சரமாறியாக தாக்குகின்றனர்.
அந்த இளம்பெண் அவரை காப்பற்ற முடிந்தளவு அந்த கும்பலிடம் கதறி அழுகிறார்.
ஆனால், அந்த நபர்கள் வாலிபரை மேலும் மேலும் கடுமையாக தாக்குகின்றனர்.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.