
சாவகச்சேரி, மீசாலையில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் க.சிவநேசன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகளை கருத்துகளால் மோத வேண்டுமே தவிர தாக்குதல் நடத்தியமை மிகவும் தவறான விடயமாகுமென அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஒவ்வொரு குடிமகனுக்கும், தங்களின் கருத்துகளையும் கட்சி ரீதியான செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் உரிமை உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் கட்சி அலுவலகங்கள் மீதோ அல்லது ஆதரவாளர்கள் மீதோ வன்முறையை பிரயோகிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதோர் விடயமாகுமெனவும் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாத சந்தேகநபர்கள் நேற்று தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.