
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒரு புதிய சாதனையில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதன்மூலம் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி 50 ஒருநாள் போட்டிகளில் 39 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக 50 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த அணித்தலைவர் என்ற சாதனையில் கோஹ்லி இணைந்துள்ளார்.
முதல் 50 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணித்தலைவர்கள்
- விராட் கோஹ்லி (இந்தியா), ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா), கிளைவ் லாய்ட் (மேற்கிந்திய தீவுகள்) – 39 வெற்றிகள்
- ஹன்சி க்ரோஜி (தென் ஆப்பிரிக்கா) – 37 வெற்றிகள்
- விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) – 36 வெற்றிகள்
- ஷான் பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா) – 34 வெற்றிகள்
- வாசிம் அக்ரம், வாகர் யூனிஸ் (பாகிஸ்தான்) – 33 வெற்றிகள்
கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பாண்டிங் 230 போட்டிகளில் தலைவராக செயல்பட்டு, 165 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். இந்திய அணித்தலைவர் டோனி 199 போட்டிகளில் 110 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.
