தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அலுவலகத்தின் பெயர்ப்பலகை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
மீசாலை மேற்கில் அமைந்துள்ள சாவகச்சேரி
தொகுதிக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்று (19) புதன்கிழமை இரவு குறித்த அலுவலகத்தின் பெயர்ப்பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.