
யூ-டியூப்பில் முதல் வீடியோவை வெளியிட்ட நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் உள்ள சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ளது யூடியூப்.
இதில் லட்சக்கணக்கான வீடியோக்கள் தற்போது உள்ளன.
யூடியூப்பில் முதன் முதலாக வீடியோவை பதிவிட்டவர் நய்முல் கரீம் என்பவர் தான்.
கரீம் கடந்த 1979-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தார்.
இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் திகதி யூடியூப்பில் Me at the Zoo என்ற தலைப்பில் முதல் வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் கரீமே தோன்றி பேசினார், அவர் பின்னால் நிறைய யானைகள் இருப்பது போல வீடியோவில் இருந்தது.
இதுவரை Me at the Zoo வீடியோவை 52 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
கரீம் யூடியூப் துணை நிறுவனர்களான சட் ஹர்லி மற்றும் ஸ்டீவ் சென்னுடன் சேர்ந்து பேபால் நிறுவனத்துக்கு பணியாற்றிய நிலையிலேயே முதல் யூடிடியூப் வீடியோவை அவரால் வெளியிட முடிந்தது.
பின்னர் கூகுள் நிறுவனம் யூடியூப்பை $1.65 பில்லியன் கொடுத்து வாங்கிய நிலையில், கரீமுக்கு $36.6 மில்லியன் பங்கு கிடைத்தது.
இதன் மூலம் ஒரே நாளில் மிக பெரிய கோடீஸ்வரராக கரீம் மாறிவிட்டார்.