
இந்த உலகத்தில் மிகவும் ஆபத்தான ஆயுதம் என்றால் அது அழுகைதான். ஏனெனில் கத்தியால் தாக்கும் போது கூட கலங்காதவர்கள் பிறரின் கண்ணீரை கண்டதும் கலங்கி விடுவார்கள். நிஜ வாழ்க்கையில் ஒருவர் அழுவதை காண்பது நமது மனதை கரைய செய்யும். அவர்கள் ஏதோ ஒரு வலியிலோ அல்லது கஷ்டத்திலோதான் அழுகிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஒருவேளை நாம் அழுவது போலவோ அல்லது பிறர் அழுவது போலவோ கனவில் கண்டால் அதன் அர்த்தம் என்ன என்பது நமக்கு புரியாத ஒன்றாகும். ஏனெனில் ஒவ்வொரு கனவும் நம்மிடம் ஒரு விஷயத்தை கூற முயலும். அதனை நாம்தான் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் கனவில் அழுவது நல்லதா அல்லது கெட்டதா என்பதை பார்க்கலாம்.
கனவில் அழுவது நல்லதா?
பொதுவான கனவில் வருவதற்கு எதிற்மறையாகத்தான் நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்ற ஒரு கருத்து உள்ளது. இது மற்ற விஷயங்களுக்கு எப்படியோ அழுவதை பொறுத்த வரையில் இது உண்மைதான். கனவு சாஸ்திரத்தின் படி கனவில் அழுவது போல காட்சி வருவது மகிழ்ச்சியின் அடையாளமாகும். கனவில் துன்பங்களை அனுபவிக்கும் போது அவர்கள் நிஜ வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது பரவலாக இருக்கும் நம்பிக்கையாகும்.
கனவு புத்தகங்கள்
கனவு புத்தகங்களில் கூறியுள்ள படி ஒருவர் சிக்கலில் இருக்கும் போது கண்டிப்பாக தனிமையில் இருக்கக்கூடாது, மாறாக துணையுடனும், ஆதரவுடனும்தான் இருக்க வேண்டும். ஆனால் மற்றொருவர் அழுவதை கனவில் பார்ப்பது துயரத்தின் அடையாளமாகும். அந்த வகையான கனவுகளை பார்த்த பிறகு பதட்டத்துடன் எழுந்தால் நிச்சயம் அது அச்சுறுத்தலின் அறிகுறியாகும்.
பதட்டம்
இந்த வகையான கனவுகளால் ஒருவர் நாள் முழுவதும் பதட்டத்துடன் காணப்பட்டால் அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ சிக்கல் ஏற்பட போகிறது என்று அர்த்தம். அதேசமயம் படுக்கையில் அமர்ந்து அழுவது போல கனவு கண்டால் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
நேர்மறையான விளைவுகள்
அனைவருக்குமே அவர்களுக்கு நம்பகமானவர்கள் ஆபத்து காலத்தில் உதவுவார்கள். ஒருவேளை நீங்கள் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களுடன் சேர்ந்து அழுவது போல கனவு கண்டால் நீங்கள் ஆசைப்பட்டது விரைவில் நடக்க போகிறது என்று அர்த்தம்.
கெட்ட கனவுக்கும் மனஅழுத்தத்திற்குமான தொடர்பு
ஒருவேளை நீங்கள் உங்கள் கண்ணீரை நீங்களே உங்கள் விரல்களால் துடைத்து கொள்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் விரைவில் அமைதி வரப்போகிறது என்று அர்த்தம். தற்போது அவர்கள் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் மனஅழுத்தத்தில் இருந்து அவர்கள் விரைவில் வெளியே வருவார்கள்.
நம்பிக்கை இழப்பு
ஒரு பெண் தன் கண்ணீரை துடைத்து கொள்வது போல கனவு வந்தால் அவர்கள் தங்கள் துணையிடம் இருந்து விரைவில் விலகி செல்ல போகிறார்கள் என்று அர்த்தம். இது போன்ற கனவுகள் வரும்போது நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. ஏனெனில் இது இந்த கனவு சிலசமயம் துயரத்திற்கு பதிலாக மகிழ்ச்சியை கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.
தனிமையின் அறிகுறி
ஒருவேளை நீங்கள் அழுது கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அருகில் நின்று சிரித்து கொண்டிருந்தால் அது ஒரு நல்ல சகுனமாகும் ஏனெனில் அது இது உங்களின் காதல் வெற்றி பெற போவதற்கான அறிகுறி ஆகும். உங்களின் கண்ணீரை நீங்களே துடைத்து கொண்டால் நீங்கள் தனிமையில் சிக்கி கொள்ளப்போகிறார்கள் என்று அர்த்தம்.