
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இணைத்தலைவர்களான வட. மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், , பிரதி அமைச்சர் கே. மஸ்தான், குழுக்களின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான காலங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கில் மீள்குடியேறியுள்ள இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் வன இலாகாவினருக்கும் இடையிலான பிரச்சினைகள், வறட்சியினால் நன்னீர் மீன் வளர்ப்பாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அருவித்தோட்டம் குளத்தினை நம்பி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இராணுவத்தினரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள விடயங்கள், பம்பைமடுவில் வவுனியா நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன குப்பைகளை கொட்டுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள், வவுனியா கூட்டுறவுக்கல்லூரி புனர்வாழ்வு முகாமாக செயற்படுவதும், அதனை மீளப்பெறுவது தொடர்பிலும் இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.