
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் போக்குவரத்து விதிகலை மீறி சென்ற கார் ஒன்று கர்ப்பிணி பெண் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சான் பெர்னார்டினோ (San Bernardino ) பகுதியில் கடந்த புதன் கிழமை இரவு பதினொன்றரை மணி அளவில் கர்ப்பிணிப் பெண் சாலையைக் கடந்து கொண்டிருந்தார். மறுபுற சாலையை அடைவதற்கு சற்று முன்பதாக அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பிய பெண், சிறிது தூரத்தில் மரத்தின் மீது மோதியதாகவும், அதன் பின் அவரை யாரே அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு பொலிசார் அப்பெண்ணைத் தேடி வருகின்றனர்.