
சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து இளைஞர் மாநாடு யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. காலை ஒன்பது மணிக்கு வண்ணை சிவன் கோயில் முன்றலிருந்து மணடபத்தை நோக்கி ஆன்மீக ஊர்வலம் இடம்பெறும். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் நல்லை திருஞானசம்பந்தர் ஆதின குரு முதல்வர்ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த சுவாமிகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் வண. அக்ஷராத்மானந்தா யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் தலைவர் வண. சிதகாஷானந்தாயாழ்ப்பாணம் வேதாந்தமட தலைவர் வண. வேதவித்யாசாகர சுவாமிகள் திருமுன்னிலையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
காலை அமர்வுகள் சிவயோக சுவாமிகள் அரங்கில் ஊவாவெல்லச பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப்பதிவாளர் இ.சர்வேஸ்வரா தலைமையில் நடைபெறவுள்ளது.அரங்க திறப்புரையினை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் இ.ரமணராஜா நிகழ்த்தவுள்ளார்இந்நிகழ்வில் ஆசியுரையினை சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ ந. சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களும் வாழ்த்துரையினை பேராதனை பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களும் வழங்கவுள்ளனர் அதனை தொடர்ந்து இலக்கிய கலைமணி சிவபாதம் கணேஸ்குமாரின் ஸ்தாபகர் உரையும் தமிழ்நாடு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் த.ராமலிங்கம் அவர்களின் சிறப்புரையும இடம்பெறவுள்ளது. ; அதனை தொடர்ந்து தமிழருவி த.சிவகுமாரன் தiலைமையில் கருத்தாடுகளம் மற்றும் கலை நிகழ்வுகளுடன் முதல் அமர்வுகள் நிறைவுபெறும்
மாலை அமர்வுகள் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்கில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளைத்தலைவர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அரங்க திறப்புரையினை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்த ஆசியுரையினை மன்னார் சைவ கலை இலக்கிய மன்றத்தலைவர் சிவஸ்ரீ மஹா .தர்மகுமாரக்குருக்கள் நிகழ்த்த வாழ்த்துரையினை தகைசார் வாழ்நாள் பேராசிரியர் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க பெருந்தலைவர், அ.சண்முகதாஸ் அவர்களும்
யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர், எஸ். சிவலிங்கராஜா அவர்களும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களும் வழங்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து இளையோர் கருத்தரங்கு சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சான்றோர் கௌரவத்தினை புராண வித்தகர் வே.வினாசித்தம்பி ஓய்வுநிலை அதிபர் ஜ.தயானந்தராஜா மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் பெறவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாநாட்டு மலர் வெளியீடு இடம்பெறும் வெளியீட்டுரையினை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை உதவி விரிவுரையாளர் கலாநிதி இ.ஜெயந்திரன் நிகழ்த்தவுள்ளார் அதனைத் தொடர்ந்து
இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் (தமிழ்நாடு) தலைமையில் சிறப்பு பட்டி மண்டபமும் நர்த்தன ஷேத்ரா நடனக்கலையகத்தின் கண்ணப்பர் குறவஞ்சி நாட்டிய நாடகமும் நடைபெறவுள்ளது