
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்களால் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்கள் நேற்று (24.02) வழங்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பதவியானது அரச தரப்பு எம்.பிகள் மற்றும் அரச ஆதரவு தரப்பினர் ஆகியோருக்கே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.