இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் தடம் பதித்துள்ள வவுனியா விபுலானந்தா கல்லூரி

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா மாவட்டம் மாகாண மட்டத்தில் இரண்டாம் நிலையை உள்ளது குறிப்பிடத்தக்கது வவுனியா மாவட்டத்தில் 68 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர் நிலையில் வவுனியா தெற்கு வலயத்தில் 56 மாணவர்களும் 9ஏ சித்திகளை பெற்றுநிலையில் அதில் 10) மாணவர கள் விபுலானந்தா கல்லூரியை சார்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

விபுலானந்தா கல்லூரியில் 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி கடந்த வருடங்களை விட அதிக உயர்சித்திகளை பெற்று பாடசாலக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் உயர்தரம் கற்பதற்கு 96வீதம் மாணவர்கள் தகுதிபெற்றுள்துடன்கடந்த வருடங்களை விட விகிதாச்சாரத்தல் அதிகரித்துள்ளனர் என பாடசாலை அதிபர் பொன்னையா சிவநாதன் தெரிவித்துள்ளார்

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 10 மாணவர்கள் (சிவராசா சங்கீதன்./ அபிசனா அகிலன்/.பிரகாஷின் ஸ்ரீரங்கரட்ணம். / யெயக்குமார் டனுஐன்/.யதுசா யோகராசா/.யூனியன் யுகாஞ்சலி./.கம்சிகா ராமச்சந்திரன்/.சதீஷகுமார் சரனியா./ஐதுசா சயந்தன்./சத்தியா ராமக்குமார் ஆகியோர்9ஏ . சித்திகளையும், மற்றும 6 மாணவர்கள் 8ஏ வி சித்திகளையும்,4 மாணவர்கள் 7ஏ2வி சித்திகளையும் பெற்று எமது பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் .
குறித்த பாடசாலையில் 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களும் நேற்று 28 திங்கட்கிழமை பாடசாலைக்கு விஜயம் செய்து அவர்களுக்கு கற்பித்த அதிபர்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தியதுடன் ,அவர்களிடம் ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டனர்
