வடக்கு மாகாண பண்பாட்டல்வல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் வெங்கலசெட்டிகுள பிரதேச செயலகம் இணைந்து கடந்த சனிக்கிழமை (26.11) செட்டிகுளம் மகாவித்தியாலத்தில் திருக்குறள் விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் செட்டிகுளம் சந்தியிலிருந்து திருவள்ளுவரின் திருவுருவத்தை தாங்கிய ஊர்வலமும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் குருபூசை வழிபாடும் நடைபெற்றது.இந்நிகழ்வானது வெங்கல செட்டிகுள உதவி பிரதேச செயலாளர் T.தர்மேந்திரா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் திருக்குறளை போற்றும் வகையில் நடன இசை நிகழ்வுகள் நடைபெற்றன வாழ்க்கைக்கு வழிகாட்டும் வள்ளுவன் எனும் தலைப்பில் இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் அவர்களின் சிறப்புரை நடைபெற்றது.அதனை தொடர்ந்து திருக்குறள் தொடர்பான போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதோடு நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்ன
















