வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றப்பட்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கை நேற்று (23.11) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாமிற்கு அருகேயுள்ள காணியினை துப்பிரவு செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள், மாவீரர்களின் பெற்றோர் இணைந்து சுத்தப்படுத்தும் வேலைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தினை அண்மித்த வளாகத்தில் மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னரே குறித்த சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


