
நமது உடலில் உள்ள சக்கரங்களை இயக்கி சக்தி அளித்து சீராக செயல்பட வைக்கும் ஆற்றல் உடையது இந்த பீஜாட்சர மந்திரங்கள்.
பீஜம் என்றால் விதை எனப் பொருள். அக்ஷரம் என்றால் எழுத்து, பீஜ + அக்ஷரம் என்றால் விதை போன்ற எழுத்து எனப் பொருள். அதாவது ஒரே ஒரு எழுத்தில் அமைந்துள்ள மந்திரத்தைக் குறிப்பதற்கே பீஜாக்ஷரம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பீஜாட்சர மந்திரத்தை பிரயோகிக்கும் இடம் அனைத்திலும் மிகப்பெரிய அதிர்வாற்றலை உண்டாக்கி அந்த இடத்திலும், அங்குள்ளோரின் ஆன்ம, ஜீவ சக்தியையும் பெருக்கும். ஆகவே மற்ற மந்திரங்களைவிட பீஜாக்ஷர மந்திரத்துக்கு அதிக சக்தி உண்டு. இதை நாம் தினமும் சொல்லிவந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.
12 ராசிக்குமான பீஜாட்சர மந்திரம்
மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
இதனை தினசரி மனதிற்குள் சொல்லி வரலாம். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையில் மனதினுள் சொல்லி வர அதற்குரிய நன்மைகளும், பலன்களும் கிடைக்கும்.