வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 27 ஆவது விளையாட்டு விழா இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ப. சத்தியநாதன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் வவுனியா பிரதேச செயலாளர் ந. கமலதாசனும் சிறப்பு விருந்தினராக வைத்தியர் ராஜ்மோகன் மனோராஜ்ஜூம் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இருபிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பரிசில் களும் வழங்கி வைக்கப்பட்டது.
