
வவுனியா, நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் நிலவிய அதிபர் பதவி வெற்றிடத்திற்கு புதிய அதிபராக இ.தமிழழகன் இன்று (02.09) காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

1ஏபி தரத்தினை சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு (எஸ்.எல்.பி.எஸ் – 1) இணை சேர்ந்த இ.தமிழழகன் என்பவரே அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.
குறித்த அதிபர் முன்னர் வவுனியா, சிதம்பரபுரம், ஸ்ரீ நாகாராஜா வித்தியாலத்தில் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் அப்பாடசாலை மாணவர்களின் பரீட்சைப் பெறுபேற்றில் மிகச்சிறப்பான வளர்ச்சியினை கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.