ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் உக்கிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி போர் களத்தில் இறங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எனினும், குறித்த செய்திகள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி செலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளதாக பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எனினும், குறித்த புகைப்படங்கள், தற்போதுள்ள புகைப்படங்கள் அல்லவெனவும், கடந்த வருடம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


