உலகில் முதல் தடவையாக தமது கணவரை சமூக ஊடகங்களில் ஏலம் விடப்போவதாக விளம்பரம் செய்த பெண் ஒருவர் தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது.

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.
லிண்டா மெக்அலிஸ்டர் ( Linda McAlister) என்ற இந்தப்பெண், தனது கணவரை, ஏலத்திற்கு விடப்போவதாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பான தகவலை அவர் தனது பல சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
எனினும் இதனை ஏற்று குறித்த பெண்ணின் கணவரை, ஏலத்தில் கொள்வனவு செய்வதற்கு 12 பெண்கள் இணக்கம் தெரிவித்து உள்ளனர்.
தமது கணவர், மீன் பிடிக்க தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்திலேயே, இந்த பெண்மணி தமது விளம்பரத்தை பதிவிட்டுள்ளார்.
ஜோன் தமது கணவர் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. மீன்பிடிக்க விரும்புவார்.

மிகவும் நல்லவர், இதற்கு முன்னர் இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.
அவர் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது
இருப்பினும் அவருக்கு சில பயிற்சிகள் தேவைப்படுகின்றன.
எனினும் தமக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது.
எனவே இந்த விற்பனை இறுதியானது. அத்துடன் விற்பனைக்கு பின்னர் மாற்றமுடியாது( Exchange) என்ற தகவலும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது
விளையாட்டாக அவர், இந்த பதிவை செய்திருந்தாலும், இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜோனை கொள்வனவு செய்த முயற்சி செய்துள்ளனர்.
சரி, இந்த சம்பவத்தின் பின்னர் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாக எவரும் நினைத்தால் அது தவறு. அவர்கள் இருவரும் இந்த விடயத்தை விளையாட்டாக கருதி சிரித்து மகிழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.