
விபுலானந்தரின் 71ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்றைய தினம் நினைவுகூரப்பட்டுள்ளது. நகரசபையினர் ஏற்பாட்டில் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடை பெற்றது.இந்த நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூக ஆர்வலர்கள் வைத்தியர் கள் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.