
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த சிவநேசன் விதுசன் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் குறித்த மாணவன் இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தற்போது மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விவசாயம், தச்சுவேலை செய்துவரும் தந்தையின் பராமரிப்பிலும் உறவினர்களின் பங்களிப்பிலும் சிகிச்சை பெற்றுவருவதாக விதுசனின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவனின் உடல் நலத்தில் அவதானத்துடன் செயற்படுமாறும் வேறு தொற்றுக்குட்படாமல் வைத்தியர்களின் தீவிர அவதானத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுமாயின் இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சித்திரம் வரைவதிலும் திறமையுடைய மாணவன் இவ்வாறு இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவே கீழே இணைக்கப்பட்டுள்ள சித்திரத்தை வரைந்திருந்தார்………….