26/11/2022

Uncategorized

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். ...
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 27 ஆவது விளையாட்டு விழா இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. சுத்தானந்த இந்து...
ஆடி மாத அமாவாசை முடிந்து விட்டால், ஆவணி மாதம் பிறப்பதாக, சந்திரனை அடிப்படையாகக்  கொண்ட கணக்கு ஒன்று உண்டு. அந்த ஆடி பவுர்ணமிக்கு...
சந்திரிகா ஏரியில் குதித்து தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது. 32 வயதான...
காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  பண்டாரகம – அட்டலுகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி காணாமல் ...
ஊழல் மிகுந்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆசியர்கள், அதிபர்கள் பணிபகிஸ்கரிப்பு...
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில்...
உலகில் முதல் தடவையாக தமது கணவரை சமூக ஊடகங்களில் ஏலம் விடப்போவதாக விளம்பரம் செய்த பெண் ஒருவர் தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது. அயர்லாந்தை...
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும்சதிமுயற்சியை முறியடிக்க 30-01-2022 இடம்பெறும் பேரணிக்கு அனைத்துத் தமிழ்மக்களையும் அணிதிரண்டுவருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.  இலங்கை தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய 1948 தொடக்கம் இன்று வரைநடைமுறையில் இருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்ட ஒன்றையாட்சிஅரசியல் யாப்புக்களானவை>   தமிழர்கள் மீதான திட்டமிட்டஇனப்படுகொலைக்கும்> நிலப்பறிப்பு> திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்>பௌத்த மயமாக்கல்கள் உள்ளிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் காரணமாகஅமைந்துவந்தன. அதன் காரணமாகவே தமிழர்கள் நாம் ஒற்றையாட்சியைநிராகரித்து சமஸ்டி ஆட்சியை கோரி போராடி வந்துள்ளோம்.  இப் போராட்டப் பயணத்தின் இடையில் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி> 1987ஆம்ஆண்டு ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுஎன்ற பெயரில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது.  34 ஆண்டுகள் கடந்தும் அதன்மூலம் தமிழ் மக்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.  இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டு 44 வருடங்களின் பின்னர்> இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்போவதாகக் கூறிஇலங்கைக்கான 4வது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு விரைவில் பாராளுமன்றத்தில்நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில்  கடந்த 34வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாகநடைமுறைப்படுத்துமாறு தமிழ் கட்சிகளால் கோரப்பட்டுள்ளது. இச் செயற்பாடு தமிழ்மக்களது அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதிமுயற்சியாகும். இச் சதிமுயற்சியை முறியடிக்கவும் தமிழ்த் தேசம் இறைமை சுயநிர்ணயமுள்ளசமஸ்டித்தீவை வலியுறுத்தியும் மாபெரும் பேரணி இடம்பெறுகின்றது. இப் பேரணிக்குஅனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.   காலம்: 30-01-2022 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மு.ப 10.00 மணி பேரணி ஆரம்பம்: யாழ். நல்லூர் கந்தன் வீதி பொதுக் கூட்டம் : கிட்டு பூங்கா முத்திரைச்சந்தி நல்லூர்